Author Topic: கோவிலில் கடவுளை எப்படி கும்பிட வேண்டும்?  (Read 1280 times)

Offline kanmani

வீட்டில் பூஜை செய்யும் போது கைகளைக் குவித்து வழிபடுவோம். ஆனால், கோயில் வழிபாட்டில் கைகளைத் தலைக்கு மேலே குவித்து வழிபடவேண்டும் என்கிறது சாஸ்திரம். கோயில் மூலவருக்கு இந்த முறை பொருந்தும். சிலருக்கு பிரதான சிவனை விட தட்சிணாமூர்த்தி, பைரவர் போன்றவர்கள் இஷ்ட தெய்வமாக இருக்கும். இஷ்ட தெய்வத்தின் சந்நிதியில் கைகளை உச்சிக்கு நேராக நன்கு உயர்த்தி தலையில் படாமல் கும்பிட வேண்டும். குருநாதரை வணங்க புருவத்திற்கு நடுவிலும், தந்தையை வணங்க வாய்க்கு நேராகவும், தாயாரை வணங்க வயிற்றுக்கு நேராகவும், மற்றவர்களை மார்புக்கு நேராகவும் கைகுவித்து வணங்க வேண்டும்.