என்னென்ன தேவை?
ரோஸ் சிரப் - 2 டேபிள்ஸ்பூன்,
மாதுளை ஜூஸ் - அரை கப்,
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
தண்ணீர் - சிறிது,
தேன் - சிறிது.
எப்படிச் செய்வது?
மாதுளை செய்யும்போது முத்துகளை மிக்சியில் அடித்து, வடிகட்டி, ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். அந்த ஜூஸ் சிவப்பு நிறத்தில், கண்ணாடி மாதிரி இருக்க வேண்டும். ஒரு உயரமான டம்ளரை எடுத்து, அதில் முதலில் மாதுளை ஜூஸ், அடுத்து ரோஸ் சிரப், எலுமிச்சைச்சாறு, தேன் மற்றும் போதுமான தண்ணீர் கலந்து நிரப்பவும். நன்றாகக் கலந்து, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.