நீரோடை மனது
"காதல்" கல் வீசி
மனதை கலைத்து
கலங்க வைத்தாய்..
அறியாமல் செய்த
காதலால்
காலம் முழுக்க
கண் கலங்க
வைத்து விட்டு
மறைந்து போனாயே
என்னை மறந்து போனாயே...
என் பாசத்தை சொல்ல
ஆயுள் போதவில்லை
சொல்ல நினைத்து
அருகில் வருகையில்
நீயே என்னிடம்இல்லை
என் ஆயுள் இனி நீள
விருப்பம் இல்லை...
என் காதலை கொன்று
என்னை மட்டும் வாழ
வைக்காதே..
என்னை கொன்று
என் காதலையாவது
வாழ வை...
உன் நினைவிலாவது
வந்து செல்கிறேன்...