பச்சரிசி- 1கப்
தேங்காய் துருவல்- 1கப்
கருப்பட்டி (பொடித்தது)- 1/2 முதல் 3/4 கப் (இனிப்புக்கு ஏற்ப)
ஏலக்காய் பொடி- 1/4தேக்கரண்டி
சுக்கு பொடி- 1/4தேக்கரண்டி
பச்சரிசியை இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும்.
ஊறவைத்த அரிசியை தண்ணீரை வடித்து சுத்தமான துணியில் இட்டு உலர்த்தவும்.
கையில் ஈரம் ஒட்டாத அளவு உலர்ந்ததும் மிக்சியில் இட்டு பொடித்து மாவாக்கி சலித்து வைக்கவும்.
இந்த மாவுடன் மற்ற பொருட்களை கலந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக பிடிக்கவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம். கருப்பட்டி, தேங்காயில் இருந்து வரும் ஈரப்பதமே போதுமானது)
சத்தான அரிசி மாவுருண்டை தயார்.
Note:
குமரி மாவட்டத்தில் பெண்குழந்தைகள் வயதுக்கு வந்த உடன் இந்த மாவுருண்டை செய்து கொடுப்பார்கள். மாவுருண்டை சாப்பிட்டு அரை மணிநேரம் வரை தண்ணீர் குடிக்கக் கூடாது (கால் கப் வேண்டும் என்றால் குடிக்கலாம்). உடனே தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. ஏலக்காய் சுக்கு வாசனை பிடிக்காதவர்கள் தவிர்க்கலாம்.