முட்டை - 3
2. தேங்காய் - 1/4 கப்
3. முந்திரி - 5 [ஊறவைத்தது]
4. சாம்பார் பொடி [கலவை தூள்] - 1 மேஜைக்கரண்டி அல்லது தேவைக்கு
5. எண்ணெய் - 3 தேக்கரண்டி
6. வெங்காயம் - 1
7. தக்காளி - 2 [சிறியது]
8. கறிவேப்பிலை
9. கடுகு - தாளிக்க
10. மஞ்சள் தூள் - சிறிது
11. உப்பு
12. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
இதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைந்து வந்ததும் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி சிறிது நீர் விட்டு மசால் வாசம் போக கொதிக்க விடவும்.
ஊற வைத்த முந்திரி மற்றும் தேங்காயை நன்றாக அரைத்து கொதிக்கும் கலவையில் ஊற்றவும்.
இந்த கலவை ஒரு கொதி வர துவங்கும் போது முட்டையை ஒவ்வொன்றாக ஒன்றின் மேல் ஒன்று படாமல் உடைத்து ஊற்றவும்.
மூடி வேக விடவும். முட்டை கலந்து வர விரும்பினால் 2-3 நிமிட இடைவெளியில் திறந்து கலந்து விட்டு மீண்டும் மூடி வேக விடலாம். இல்லை எனில் முழுவதும் வெந்து வரும் வரை கலக்காமல் விட்டு வேக விடவும்.
முட்டை வெந்ததும் எடுத்து விடலாம். சுவையான முட்டைக்கறி தயார்.
Note:
சூடான சாதம், சப்பாத்தி, தோசை, குஸ்கா போன்றவைக்கு நல்ல ஜோடி.