Author Topic: பன்னீர் குல்ச்சா  (Read 709 times)

Offline kanmani

பன்னீர் குல்ச்சா
« on: June 14, 2013, 10:24:14 AM »
தேவையான பொருட்கள்:

மைதா - 2 கப்
வெதுவெதுப்பான பால் - 1/2 கப்
தயிர் - 1/3 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எள் - 2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
தண்ணீர் - 2 கப்

உள்ளே வைப்பதற்கு...

பன்னீர் - 1/2 கப் (துருவியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 2 (தட்டியது)
பச்சை மிளகாய் - 3-4 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அத்துடன் தயிர், பால் சேர்த்து, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

வேண்டுமெனில் அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பின்பு அதனை 2 மணிநேரம் ஈரத்துணியால் மூடி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 2 மணிநேரம் ஆனப் பின்பு, மீண்டும் அதனை பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு சிறிய பௌலில் உள்ளே வைப்பதற்கு என்று குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் உருட்டு வைத்துள்ள மைதா உருண்டைகளை சப்பாத்தி போல் தேய்த்து, அதன் நடுவே பன்னீர் கலவையை சிறிது வைத்து மடித்து, மீண்டும் அதனை சப்பாத்திகளாக தேய்க்க வேண்டும்.

அடுத்து ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள குல்ச்சாக்களை போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி லேசான பொன்னிறத்தில் வந்ததும், எடுக்க வேண்டும்.

இதேப் போல் அனைத்து மைதா உருண்டைகளையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான பன்னீர் குல்ச்சா ரெடி!!! இதனை மசாலாவுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.