என் மக்கள் சுதந்திரமாய் வாழ ஒரு நாடு
தனித் தமிழ் ஈழம் என்ற ஒரு கனவு
சிதறியது கயவர்களின் வெறித்தனத்தால்!
இராக்கிலும் ஆப்கானிலும்
அந்நாட்டு மண்ணின் மைந்தர்களின் கனவு...
கானல் நீராய் போயிற்று ஏகாதிபத்திய கழுகுகளால்!
சூடானிலும் சோமாலியாவிலும் கனவில் கூட...
உணவை பார்க்காத மனிதர்கள் தான் அதிகம்!
உலகையே தன் வச படுத்த கனவு காணும்
ஏகாதிபத்தியத்தின் அழிவு வெகு தூரம் இல்லை!!!