Author Topic: மீல் மேக்கர் மசாலா  (Read 473 times)

Offline kanmani

மீல் மேக்கர் மசாலா
« on: June 12, 2013, 10:47:42 AM »
தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் - 250 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 1/2 கப் (வெதுவெதுப்பானது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை:

முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

 பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

அடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

 பின் மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இப்போது மீல் மேக்கர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

மசாலாவானது நன்கு கொதித்ததும், தீயை அணைத்துவிட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், அருமையான மீல் மேக்கர் மசாலா ரெடி!!

« Last Edit: June 22, 2013, 10:03:00 AM by kanmani »