Author Topic: இஞ்சி கறி  (Read 758 times)

Offline kanmani

இஞ்சி கறி
« on: May 25, 2013, 01:19:35 AM »
என்னென்ன தேவை?

இஞ்சி பேஸ்ட்- 1 கப் (விழுது),
கெட்டியாக கரைத்த புளி - 1 கப், வரமிளகாய் - 5,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
வெல்லம் - அரை கப் (சுத்தமானது),
வெள்ளை எள் - 1 டேபிள் ஸ்பூன்,
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
கடுகு, கறிவேப்பிலை,
உப்பு தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது? 

ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து, கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டுத் தாளித்து இத்துடன் இஞ்சி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.  வதங்கியவுடன் கரைத்த புளி, மஞ்சள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும். இத்துடன் இடித்து  சுத்தம் செய்த வெல்லத்தை சேர்த்து சிறிது தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். பின் இறக்கி, வெறும் கடாயில்  வெள்ளை எள்ளை வறுத்துக் கொட்டவும். இது 2 வாரம் வரை கெடாது.
« Last Edit: June 22, 2013, 10:04:42 AM by kanmani »