கோழி - அரை கிலோ
சைனீஸ் க்ரீன் கறி பேஸ்ட் - 50 கிராம்
லெமன் கிராஸ் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கஃபிர் லைம் இலை (Kaffir Lime Leaves) - 6
பேஸில் இலை - சிறிது
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
கெட்டி தேங்காய் பால் - 2 கப்
தனியா தூள் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
கோழியை சுத்தம் செய்து வேண்டிய அளவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, க்ரீன் கறி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
கோழி, தனியா தூள், கஃபிர் லைம் இலை, பேஸில் இலை, நறுக்கிய லெமன் கிராஸ் மற்றும் உப்பு சேர்த்து சுருள வதக்கவும்.
அதனுடன் தேங்காய் பால் சேர்த்து 15 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேகவிட்டு இறக்கவும்.
சைனீஸ் க்ரீன் கறி தயார். சூடாகப் பரிமாறவும்.
இது போல் சைனீஸ் ரெட் கறியிலும் செய்யலாம். கோழிக்கு பதில் மட்டன் சேர்த்தும் செய்யலாம். பேஸில் இலை, கஃபிர் இலை (நார்த்தை இலை), சைனீஸ் கறி பேஸ்ட், லெமன் கிராஸ் ஆகியவையெல்லாம் சைனீஸ் கடைகளில் கிடைக்கும்.