தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2 அல்லது 2 1/2 கப் (துருவியது அல்லது துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, துருவிய அல்லது துண்டுகளாக்கப்பட்ட பீட்ரூட்டை சேர்த்து, 4-5 நிமிடம், தீயை குறைவில் வைத்து வதக்கி விட வேண்டும்.
பின்பு அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு, நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, பீட்ரூட் வேகும் வரை மூடி வைக்க வேண்டும்.
பீட்ரூட்ரானது வெந்ததும், அதனை இறக்கி சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பரான இருக்கும்.