Author Topic: ரிகோட்டா குக்கீஸ்  (Read 509 times)

Offline kanmani

ரிகோட்டா குக்கீஸ்
« on: May 14, 2013, 12:45:16 PM »


    ஆல் பர்பஸ் மாவு - ஒரு கப்
    சர்க்கரை - கால் கப்
    ரிகோட்டா சீஸ் - அரை கப்
    முட்டை - ஒன்று (நன்றாக அடித்து பாதி எடுத்து கொள்ளவும்)
    வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
    எலுமிச்சை ஜூஸ் - ஒரு மேசைக்கரண்டி
    லெமன் ஜெஸ்ட் - அரை மேசைக்கரண்டி
    க்லேஸ் செய்ய :
    பவுடர்ட் சுகர் - 2 மேசைக்கரண்டி
    எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
    லெமன் ஜெஸ்ட் - ஒரு தேக்கரண்டி

 
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். முட்டை, வெண்ணெய், ரிகோட்டா சீஸ் ஆகியவை அறை வெப்பநிலையில் இருப்பது அவசியம்.
   

சர்க்கரையுடன் வெண்ணெய், முட்டை, பேக்கிங் பவுடர் சேர்த்து க்ரீம் பதத்தில் அடிக்கவும்.
   

அதில் எலுமிச்சை சாறு, ஜெஸ்ட், ரிகோட்டா சீஸ் கலந்து அடிக்கவும்.
   

அதனுடன் மாவு சேர்த்து கலக்கவும்.
   

பேக்கிங் ட்ரேயில், குக்கீ ஸ்கூப்/கரண்டி கொண்டு கலவையை இடைவெளி விட்டு வைக்கவும். குக்கீ தளரும் அதனால் கலவையை பரப்பிவிடாமல் வைக்கவும்.
   

350 f முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் வைத்து அடியில் லேசாக சிவந்து வரும் போது எடுத்து ஆறவிடவும். இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது க்லேஸ் செய்தும் சாப்பிடலாம்.
   

க்லேஸ் செய்ய கொடுத்த பொருட்களை ஒன்றாக கலந்து, ஆறிய குக்கீஸின் மேல் சிறிது ஊற்றி அரை மணிநேரம் கழித்து பரிமாறலாம்.
   

குழந்தைகளுக்கு பிடித்த வகை சாக்லெட்ஸை மெல்ட் செய்து குக்கீஸில் டெக்கரேட் செய்து கொடுக்கலாம். சுவையான ரிகோட்டா குக்கீஸ் தயார்.