Author Topic: பச்சை பட்டாணி நிமோனா  (Read 616 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 3 கப்
உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச்
 பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2-3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 3-4
பிரியாணி இலை - 2
வரமிளகாய் - 2
 இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பச்சைப் பட்டாணியை ஓரளவாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகப் பொடி, மல்லித் தூள், மிளகுத் தூள், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்குகளை 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்கி, ஒரு தட்டில் தனியாக போட்டுக் கொள்ள வேண்டும்.

 பின்பு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்த அனைத்துப் பொருட்களையும் போட்டு, 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து, 3 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து, 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.

இறுதியில் அரைத்து வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 3 நிமிடம் கொதிக்க விட்டு, வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 10 நிமிடம் ஆனதும், மூடியைத் திறந்து, கரம் மசாலா தூவி கிளறி விட்டு, இறக்கி விட வேண்டும்.

 இப்போது சுவையான பச்சை பட்டாணி நிமோனா ரெடி!!! இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சிறந்ததாக இருக்கும்.