தேவையான பொருட்கள்:
கைக்குத்தல் அரிசி - 2 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
அவில் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 7-8 கப்
செய்முறை:
முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் அவிலை தனித்தனியாக நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் ஒவ்வொன்றையும் 3 கப் தண்ணீர் ஊற்றி, 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனை கழுவி வடிகட்டி விட்டு தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
முதலில் அரிசியை கிரைண்டரில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உளுத்தம் பருப்பை மற்றும் அவிலை தனியாக நன்கு நைஸாக அரைத்து விட்டு, மூன்றையும் ஒன்றாக மீண்டும் கிரைண்டரில் போட்டு, 10 நிமிடம் நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு அதனை 4 மணிநேரம் வெதுவெதுப்பான இடத்தில் ஊற வைத்துக் கொண்டு, உப்பு போட்டு கிளறி, இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான கைக்குத்தல் அரிசி இட்லி ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.