Author Topic: பிரெட் பேல்பூரி  (Read 622 times)

Offline kanmani

பிரெட் பேல்பூரி
« on: May 11, 2013, 11:15:53 AM »
என்னென்ன தேவை?

சால்ட் பிரெட் - 8, உருளைக்கிழங்கு சிப்ஸ் - 12, பொடியாக நறுக்கிய கேரட், மாங்காய், வெள்ளரி, தக்காளி - தலா 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 1, கருப்பு உப்பு - சிறிது, உப்பு, மிளகாய் தூள் - தேவைக்கேற்ப, பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன், வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு - 1, மெல்லிய ஓமப்பொடி - அரை கப், பொறி - 1 கப், எலுமிச்சைச்சாறு - சிறிது, எண்ணெய் - தேவைக்கேற்ப.

இனிப்பு சட்னிக்கு...

சிறிதளவு புளி, வெல்லம், ஊற வைத்த பேரீச்சம் பழம் சேர்த்து அரைத்து, அதில் வறுத்த சீரகம் சிறிது சேர்க்கவும்.

புளிப்பு சட்னிக்கு...

புதினா, கொத்தமல்லி, இஞ்சி, உப்பு, பச்சை மிளகாய், எலுமிச்சைச்சாறு சேர்த்து அரைக்கவும்.
எப்படிச் செய்வது?

பிரெட்டை சிறு துண்டுகளாக வெட்டி, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். அல்லது பிரெட் டோஸ்டரில் டோஸ்ட் செய்து கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் முதல் எலுமிச்சைச்சாறு வரை எல்லாவற்றையும் கலந்து, இனிப்பு, புளிப்பு சட்னி சேர்த்து, கடைசியில் சிறிது வெங்காயம், கொத்தமல்லி, ஓமப்பொடி தூவிப் பரிமாறவும். பிரெட்டுக்கு பதில் பிஸ்கெட்டை உடைத்துப் போட்டும் செய்யலாம்.