Author Topic: கோல்கப்பா  (Read 568 times)

Offline kanmani

கோல்கப்பா
« on: May 11, 2013, 11:15:05 AM »
ன்னென்ன தேவை?

கோல்கப்பா செய்ய...

மெல்லிய ரவை - முக்கால் கப், மைதா - அரை கப், உளுத்தம் மாவு - 1 டீஸ்பூன், பேகிங் பவுடர் - 1 சிட்டிகை, உப்பு - கால் டீஸ்பூன், ஐஸ் வாட்டர் - மாவு  பிசைவதற்கு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

பழப் பூரணத்துக்கு...

பொடியாக நறுக்கிய ஆப்பிள், அன்னாசி, மாம்பழம், மாதுளை, வெள்ளரி - தேவைக்கேற்ப, சாட் மசாலா - சிறிது.

சுண்டல் பூரணத்துக்கு...

ஏதேனும் விருப்பமான சுண்டல் - சிறிது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், சாட் மசாலா - சிறிது.

ஸ்வீட் அண்ட் சோர் பூரணம்...

முளைகட்டிய தானியங்கள் - சிறிது, வேக வைத்துப் பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்கு - சிறிது, இனிப்பு மற்றும் புளிப்பு சட்னி - சிறிது.

எப்படிச் செய்வது?

கோல்கப்பாவுக்கு கொடுத்துள்ள பொருள்களைப் பிசைந்து, குட்டிக் குட்டி பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பொரித்துத் தயாராக  வைத்துள்ள பூரிக்களில் நடுவில் துளையிட்டு, மேலே சொன்னதில் ஏதேனும் ஒரு பூரணத்தை ஸ்டஃப் செய்து பரிமாறவும்.