என்னென்ன தேவை?
பேரீச்சம் பழம் - 100 கிராம், முந்திரி - 25, பாதாம் - 20, உடைத்த அக்ரூட் - அரை கப், திராட்சை - கால் கப், அத்திப்பழம் - சிறிது, கொப்பரைத் துருவல் - சிறிது, பொடித்த சர்க்கரை - தேவைக்கேற்ப, லிக்விட் குளூக்கோஸ் - சிறிது, நெய் - கால் கப், அலங்கரிக்க - செர்ரி.
எப்படிச் செய்வது?
நெய், செர்ரி தவிர மற்ற எல்லா பழங்களையும் நட்ஸையும் பொடியாக நறுக்கவும். அத்துடன் லிக்விட் குளூக்கோஸ் சேர்த்து, சர்க்கரை சேர்த்து, சூடான நெய் சேர்த்துக் கலக்கவும். சிறு உருண்டைகளாகப் பிடித்து, மேலே செர்ரி வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.