என்னென்ன தேவை?
பில்லட் மீன் -700 கிராம்
சோயா சாஸ்- 1 கப்
சர்க்கரை- 1/4 கப்
எண்ணெய்-1/4கப்
இஞ்சி 2 தேக்கரண்டி
கிராம்பு பூண்டு-2
எள் விதைகள் 1 டீஸ்பூன்
எப்படி செய்வது?
ஒரு பெரிய பாத்திரத்தில் சோயா சாஸ், சர்க்கரை, எண்ணெய், இஞ்சி, பூண்டு விழுதாக்கி சேர்த்து கலந்துக் கொள்ளவும். பில்லட் மீன்களை நான்கு துண்டுகளாக வெட்டி கலந்து வைத்துள்ள கலவையில் சேர்க்கவும். பின்னர் கடாயில் கலவையை கொட்டி மீன் துண்டுகளை 3 முதல் 4 நிமிடங்கள் சூடு பறக்க வேகவைத்து எடுக்கவும். பில்லட் மீன்களின் மேல் எள் விதைகளை தூவி பாத்திரத்தில் எடுத்து வைத்து பரிமாறவும்.