Author Topic: மூங் ஃபிங்கர்ஸ்  (Read 595 times)

Offline kanmani

மூங் ஃபிங்கர்ஸ்
« on: May 11, 2013, 11:02:28 AM »
என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு - அரை கப், பிரெட் ஸ்லைஸ் - 8, பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி, பச்சை  மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், மிளகாய் தூள் - சிறிது, கரம் மசாலா - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

பருப்பைக் கழுவி, அளவான தண்ணீர் சேர்த்து, குழையாமல், பதமாக வேக வைக்கவும். வெந்ததும் தண்ணீரை வடிக்கவும். பிரெட்டை தண்ணீரில் போட்டு,  உடனே எடுத்து, ஒவ்வொரு துண்டாகப் பிழிந்து, பருப்புடன் சேர்க்கவும். அத்துடன் எண்ணெய் தவிர, மற்ற பொருள்களையும் சேர்த்துக் கலக்கவும். பிறகு  எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, அதை நீள வாக்கில் குழல்கள் போலாக்கவும். சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். புதினா  சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.