Author Topic: ஸ்வீட் அண்ட் சோர் நூடுல்ஸ் சூப்  (Read 518 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

பிளெயின் நூடுல்ஸ் - 1 பாக்கெட், கேரட், பீன்ஸ், பட்டாணி, கோஸ்  சேர்த்து வேக வைத்த காய்கறிக் கலவை - கால் கப், (வேக வைத்த தண்ணீரைக் கொட்ட  வேண்டாம்), வெண்ணெய் - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது, கொத்தமல்லித் தழை - சிறிது, மிளகுத் தூள் -  தேவைக்கேற்ப, ரெட் சில்லி சாஸ் - அரை டீஸ்பூன், சர்க்கரை - கால் டீஸ்பூன், சோளமாவுக் கரைசல் - 1 டீஸ்பூன், வினிகர் -  டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

நூடுல்ஸை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, 2 நிமிடங்கள் வேக வைத்து வடித்து, பிறகு சாதாரண தண்ணீரில் அலசி, உடைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு  பாத்திரத்தில் வெண்ணெய் காய வைத்து, அதில் வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அத்துடன் வேக வைத்த காய்கறிகளை, அதை வேக வைத்த  தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்கவிட்டு, நூடுல்ஸ், சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள், சாஸ், வினிகர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, இறக்கும்போது, சோளமாவுக்  கரைசலைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, மல்லி தூவிப் பரிமாறவும்.