தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 1 1/2 கப் (நறுக்கியது)
புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு (1 கப் நீரில் ஊற வைத்தது)
வெல்லம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மசாலாவிற்கு...
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
வர மிளகாய் - 5
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் நறுக்கிய பாகற்காயை, மஞ்சள் கலந்து நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து 1 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து கசகசாவையும் சேர்த்து சிறிது நேரம் வறுத்து, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
பின்னர் வறுத்த பொருட்களை குளிர வைத்து, அதனை தேங்காயுடன் சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஊற வைத்துள்ள பாகற்காயை, அத்துடன் சேர்த்து 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின் புளியைக் கரைத்து பாகற்காய் கலவையில் ஊற்றி, தீயை குறைவிலேயே வைத்து 15-20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
பாகற்காயானது நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
இப்போது சுவையான பாகற்காய் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.