தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1/2 கப்
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 1/2 கப்
ரோஸ் சிரப் - 4 டேபிள் ஸ்பூன்
பச்சை ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
பிஸ்தா - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப்
ரோஸ் இதழ்கள் - அலங்கரிக்க
செய்முறை:
பாசுமதி அரிசியை 1/2 கப் தண்ணீரில், 1 மணிநேரத்திற்கு ஊற வைத்துக் கொண்டு, பின் அதனை மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் சர்க்கரை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின்னர் அதில் ரோஸ் சிரப் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விடவும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள பாசுமதி அரிசியை, பாலுடன் சேர்த்து, தொடர்ந்து கெட்டி கெட்டியாக இருக்காதவாறு 15 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
கலவையானது சற்று கேசரி போன்ற பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்து இறக்கி விட வேண்டும்.
பின்பு அதன் மேல் ஏலக்காய் பொடி தூவி, கிளறி விட்டு, குளிர வைத்து, பின் அதனை ஒரு பௌலில் போட்டு, அதன் மேல் ரோஜா இதழ்கள் மற்றும் பிஸ்தாவை தூவி அலங்கரித்து பரிமாறினால், சுவையான குலாபி ஃபெர்னி ரெடி!!!