Author Topic: ஹனி பேக்டு பனானா  (Read 605 times)

Offline kanmani

ஹனி பேக்டு பனானா
« on: May 06, 2013, 11:05:46 PM »

    வாழைப்பழம் - 2
    தேன் - தேவைக்கு
    எலுமிச்சை - பாதி
    பொடித்த பட்டை - கால் தேக்கரண்டி
    சீரியல்ஸ் -அரை கப்

 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
   

ஒரு வாழைப்பழத்தை மேலிருந்து இரண்டாக நறுக்கவும். அதில் தேனைத் தடவி அதன் மேல் பட்டையைத் தூவி விடவும்.
   

இந்த பழத்துண்டுகளை பேக்கிங் ட்ரேயில் வைத்து, மேலே சிறிது எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும்.
   

இதை அவனில் 325f சூட்டில் 8-10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். சுவையான ஹனி பேக்டு பனானா தயார். சாக்லேட் சிப்ஸுடன் சாப்பிட குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பிடித்த வகை சாக்லேட்ஸ், மர்ஸ்மெல்லொஸ், சாக்கோ பட்டர், பீநட் பட்டர் இவற்றில் ஒன்றை வைத்து டாப்பிங் செய்து கொடுக்கலாம்.
   

மற்றொரு வாழைப்பழத்தை இரண்டாக நறுக்கி, தேனில் பிரட்டி சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து வைக்கவும்.
   

அந்த பழத்தை சீரியல்ஸில் பிரட்டி எடுத்து, அவனில் 325 f சூட்டில் 12-15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
   

சுவையான க்ரஞ்சி ஹனி பேக்டு பனானா தயார். ட்ரை ஃப்ரூட்ஸ் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.