Author Topic: ~ வேம்பு - மருத்துவ குணங்கள் ~  (Read 403 times)

Offline MysteRy

வேம்பு - மருத்துவ குணங்கள்




1. வேப்பம்பட்டை விட்டு விட்டு வருகிற ஜீரத்திற்கு உதவுகிறது.
2. ரத்தத்தைச் சுத்திகரிக்கும் குணமிருப்பதால் குஷ்ட நோய்க்குக் கொடுக்கப்படுகிறது.
3. வயிற்றில் பூச்சித் தொந்தரவு உள்ளவர்களுக்கு இளந்தளிர்களை உப்புடனும் மிளகுடனும் அரைத்துக் கொடுக்கப்படுகிறது.
4. காமாலை நோய்க்கு வேப்பிலைச் சாற்றைத் தேனுடன் கலந்து கொடுக்கப்படுகிறது.
5. புண்களைச் சுத்தம் பட்டைக் கஷாயம் பயன்படுகிறது.
6. வேப்பிலையும், மஞ்சளையும் சேர்த்தரைத்து பற்றை அம்மைப் புண்களில் மருந்தாகப் பூசப்படுகிறது.
7. வேப்பெண்ணெய் புண்களை அகற்றுவதற்காக மேலே பூசப்படும்.
8. புத்தகங்களை அரிக்கும் பூச்சிகளை அகற்றுவதற்கு நூல் நிலையங்களில் வேப்பிலை பயன்படுகிறது.
9. வேப்பம்பூ, வாந்தி, ஏப்பம், பித்தம் ஆகியவற்றைப் போக்கும்.
10. வேப்பம் பழத்தின் ரசத்தை எடுத்து சரும வியாதியுள்ளவர்களுக்கு கொடுத்து வந்தால் நோய் தீரும்