கோவக்காய் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 10
வரமிளகாய் - 2
சாம்பார் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். கோவக்காயை நன்கு கழுவி, அதன் நுனிப் பகுதியை நறுக்கி விட்டு, வட்ட துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்பு கோவக்காயைப் போட்டு வதக்கி மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு போட்டு நன்கு கிளறி விடவும்.
அதனுடன் சிறிதளவு நீர் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். இடையிடையே நன்கு கிளறிவிட்டு, நீர் போதவில்லையெனில் மேலும் சிறிது நீர் விட்டு வேகவிடவும். நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
சுவையான கோவக்காய் பொரியல் தயார். இது தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள ருசியான இணை உணவாகும். கோவக்காய் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.