என்னென்ன தேவை?
பிங்க் நிற ஜெல்லி பாக்கெட் - 1,
கன்டென்ஸ்டு மில்க் - 1 டின்,
ஜெலட்டின் பவுடர் - 1 டீஸ்பூன்,
அலங்கரிக்க பழங்கள் - விருப்பத்துக்கேற்ப.
எப்படிச் செய்வது?
ஜெல்லி பாக்கெட்டில் உள்ள தயாரிப்பு முறைப்படி ஜெல்லியை தயார் செய்து கொள்ளவும். அதை இரண்டு பாகங்களாகப் பிரித்து, ஒன்றை புட்டிங் பாத்திரத்தில் போட்டு, ஃப்ரீசரில் வைக்கவும். 1 டேபிள்ஸ்பூன் வெந்நீரில் ஜெலட்டினை நன்கு கரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள ஜெல்லியில் கன்டென்ஸ்டு மில்க்கையும், ஜெலட்டின் கரைசலையும் சேர்த்து முள் கரண்டியால் நன்கு நுரைக்க அடிக்கவும். ஃப்ரீசரில் இருக்கும் ஜெல்லி இறுகிய பின்னர், பால் கலந்த ஜெல்லியை அதன் மேல் விட்டு, மறுபடி உறைய வைக்கவும். நன்கு உறைந்ததும், வெளியே எடுத்து, பழங்களால் அலங்கரித்துப்
பரிமாறவும்.