Author Topic: கொத்தவரங்காய் ப்ரை  (Read 529 times)

Offline kanmani

கொத்தவரங்காய் ப்ரை
« on: April 30, 2013, 12:20:33 AM »
என்னென்ன தேவை?

கொத்தவரங்காய்-1/2கப்
எண்ணெய்-தேவையான அளவு
சோயா சாஸ்-1/2தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு


எப்படி செய்வது?

கொத்தவரங்காயை நன்கு கழுகி இரண்டு முனைகளிலும் கட் செய்து தகுந்த நீளத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு  எண்ணெய் சூடானதும் கொத்தவரங்காயை போட்டு வறுக்கவும். 2 அல்லது 3 நிமிடங்களுக்கு கொத்தவரங்காயை எண்ணெயில் விட்டு கருகாத  அளவுக்கு வறுத்தெடுக்கவும். பின்னர் உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து கிளறி பரிமாறவும்.