Author Topic: கோதுமை ஓட்ஸ் தோசை  (Read 750 times)

Offline kanmani

கோதுமை ஓட்ஸ் தோசை
« on: April 30, 2013, 12:13:07 AM »

 
    கோதுமை ரவை - முக்கால் கப்
    ஓட்ஸ் - 1/4 - 1/2 கப்
    இட்லி அரிசி (அ) பச்சரிசி - கால் கப்
    உளுந்து - 2 மேசைக்கரண்டி
    வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

ஓட்ஸ், உப்பு தவிர மற்ற பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, தண்ணீரில் களைந்து கொள்ளவும். பின்னர் அதனுடன் ஓட்ஸ் சேர்த்து மூழ்குமளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்கவும். (அதிக தண்ணீரில் ஊறவைக்க வேண்டாம்).
   

ஊறவைத்தவற்றை அதிலுள்ள தண்ணீருடன் சேர்த்து கிரைண்டரில் அல்லது மிக்சியில் அரைத்து, உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் மாவை 6 முதல் 8 மணி நேரம் வரை வைத்து புளிக்கவிடவும்.
   

தவாவை சூடாக்கி மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
   

சட்னியுடன் சாப்பிட சுவையான கோதுமை, ஓட்ஸ் தோசை தயார்.

 
இதில் ஆனியன் தோசை, முட்டை தோசை, மசாலா தோசை என எல்லா தோசை வகைகளும் செய்யலாம். ஓட்ஸ் சேர்க்காமல் கோதுமை ரவையில் மட்டும் கூட செய்யலாம். அப்படி செய்யும் போது மாவு விரைவாக (4 மணிநேரத்தில்) பொங்கி விடும். எல்லாவித சட்னியும் இந்த தோசைக்கு பொருந்தும். மேற்சொன்ன அளவில் 8 முதல் 10 தோசை வரும்.