Author Topic: தயிர் வடை  (Read 582 times)

Offline kanmani

தயிர் வடை
« on: April 30, 2013, 12:07:46 AM »
தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

தயிருக்கு...

தயிர் - 1 கிலோ
 இஞ்சி - 1/2 டீஸ்பூன் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
 சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் உளுத்தம் பருப்பை 5-6 மணிநேரம் ஊற வைத்து, பின் கிரைண்டரில் போட்டு, தண்ணீர் ஊற்றாமல் நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதனை வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 பிறகு ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி, நன்கு அடித்து, மிளகாய் தூள், சீரகப் பொடி, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் வடையை தட்டிலோ அல்லது சிறு கிண்ணத்திலோ வைத்து, அதில் தயிர் கலவையை ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லியை தூவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து பரிமாறினால், தயிர் வடை ரெடி!!!