Author Topic: பிதுக்குப் பருப்புக் குழம்பு  (Read 515 times)

Offline kanmani

என்னென்ன தேவை?
வெள்ளை மொச்சைக்கொட்டை - 200 கிராம்,
தக்காளி - 4,
தேங்காய் அரைத்த விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - சிறிது,
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க.
அரைப்பதற்கு...
மிளகாய் வற்றல் - 5,
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
பூண்டு - 2 பல்,
தனியா - 2 டீஸ்பூன்,
வெங்காயம் - 8.
எப்படிச் செய்வது?

மொச்சைக்கொட்டையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் தோலை நீக்கி, உள்ளே இருக்கும் வெள்ளையான பருப்பை மட்டும் பிதுக்கி  எடுத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்சியில் அல்லது அம்மியில் அரைத்து பிதுக்கி வைத்துள்ள பருப்புடன் சேர்த்து,  நறுக்கிய தக்காளி சேர்த்து, உப்பு போட்டு, அளவாகத் தண்ணீர் விட்டு, குக்கரில் வேக விடவும்.

7 விசில் வைக்கலாம். பருப்பு வேக நேரமாகும். பிறகு இறக்கி, தேங்காய் விழுது சேர்த்துக் கலந்து, மத்தால் நன்கு கடையவும். மையாகக் கடையாமல்,  ஒன்றும் பாதியுமாகக் கடைந்து, எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிப் பரிமாறவும். கடையாமலே விட்டால் இன்னும் சுவையாக  இருக்கும். பிதுக்கிய பருப்பை அம்மியில் அரைத்துப் பிறகு மசாலா கலந்தும் குழம்பு வைக்கலாம்.  சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்த பிதுக்குப்  பருப்புக் குழம்பு விட்டுச் சாப்பிடலாம்.