Author Topic: சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர்  (Read 629 times)

Offline kanmani

என்னென்ன தேவை?
சர்க்கரை வள்ளிக் கிழங்கு பெரியது - 1,
தேங்காய் பால் - 1 கப் (கெட்டியான முதல் பால்),
இரண்டாம், மூன்றாம் பால் - தலா 1 கப்,
வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கப்,
சர்க்கரை - தேவைக்கேற்ப,
ஏலக்காய் தூள் - சிறிது,
வறுத்த முந்திரி - சிறிது.
எப்படிச் செய்வது?

சர்க்கரை வள்ளிக் கிழங்கை தோல் சீவி சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி, இரண்டாம் பாலில் வேக விடவும். வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.  மூன்றாவது பால் விடவும். வெல்லம் அல்லது கருப்பட்டியை உடைத்து சுத்தம் செய்து, சிறிது தண்ணீரில் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும்.  வெந்த கிழங்கில் வெல்லக் கரைசலைச் சேர்த்து, மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு, உடனே இறக்கி, முதல் பால், ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.ஏலக்காய் தூளுக்குப் பதில் சுக்குத் தூளும் சேர்க்கலாம். வேறொரு தனி சுவை கிடைக்கும்.