Author Topic: காதல்  (Read 572 times)

Offline Jawa

காதல்
« on: April 23, 2013, 11:05:14 PM »
உன் பாத சுவடு ஒற்றி
நடக்கிறேன்,சிறு குழந்தை போலவே.

உன் பாத மண்துகள்களை
சேமிக்கிறேன்.

நடந்து பழகும் சிறு
குழந்தையின் லாவகத்தோடு
உன் பாத தடங்களில்
என் பாதங்களை பதிக்கிறேன்.

காற்று கொண்டு வந்த
மண்ணின் துகள்கள்
என் விழி நிறைத்தாலும் ,
கண்ணீர் வரவில்லை

உன் பாத சுவடின்
மண்துகள்கள் என்பதால்

Offline Global Angel

Re: காதல்
« Reply #1 on: June 26, 2013, 01:55:41 AM »
கண்ணீர் எல்லா சந்தர்பத்திலும் வருவதில்லை என்பதற்கு ஒரு நல்ல கவிதை ஜாவா நன்று