என்னென்ன தேவை?
கோதுமை மாவு, மைதா மாவு - தலா 1 கப்,
பாசிப்பருப்பு அல்லது முளைகட்டிய பச்சைப் பயறு அல்லது கடலைப்பருப்பு - 1 கப்,
பச்சை மிளகாய் - 2,
சீரகம் - 1 டீஸ்பூன்,
சர்க்கரை - 1 சிட்டிகை,
முழு தனியா - 1 டீஸ்பூன்,
கருப்பு சீரகம் - கால் டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
நெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மேல் மாவுக்கு...
கோதுமை, மைதா, தேவையான உப்பு, நெய், கருப்பு சீரகம் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து வைக்கவும்.
பூரணம் செய்ய...
பச்சைப் பயறு என்றால் முதல் நாளே ஊற வைத்து, முளைகட்டவும். அடுத்த நாள் வடித்து, மிளகாய், தனியா, சீரகம், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். அதில் சர்க்கரை சேர்க்கவும். பிறகு கலவையை சிறிது எண்ணெயில் லேசாக வதக்கவும். மாவில் இருந்து சற்று கனமான பூரிகளாக இட்டு, நடுவில் 1 டீஸ்பூன் மசாலாவை வைத்து மூடி, பூரியாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.