Author Topic: சாக்லெட் பிரவுனீஸ்  (Read 690 times)

Offline kanmani

சாக்லெட் பிரவுனீஸ்
« on: April 20, 2013, 02:50:54 PM »
என்னென்ன தேவை?

மைதா - 1 கப்,
பொடித்த சர்க்கரை - 1 கப்,
பேகிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் - சில துளிகள்,
வெண்ணெய் - முக்கால் கப்,
உப்பு - 1 சிட்டிகை,
பால் - அரை கப்,
உடைத்த அக்ரூட் (வால்நட்) - 2 டேபிள்ஸ்பூன்,
கோகோ பவுடர் - 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சலித்த மைதாவுடன் பேகிங் பவுடர் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். வெனிலா எசென்ஸ், பால், கோகோ பவுடர் கலந்து, மைதா  கலவையுடன் சேர்க்கவும். இதை மெதுவாக நன்கு அடித்து ஒரே பக்கமாகக் கலக்கவும். 1 டீஸ்பூன் மைதா மாவில் உடைத்த அக்ரூட் துண்டுகளில்  பாதியைச் சேர்த்துக் கலவையில் மெதுவாகக் கலந்து, சதுரமான வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டி, அதன் மேல் மீதமுள்ள அக்ரூட் துண்டுகளால்  அலங்கரித்து சூடு செய்த அவனில் 25 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்.

வெந்த பிறகு நன்கு வாசனை வரும். ஆறியதும் துண்டுகள் போடவும். அவன் இல்லாதவர்கள் ஒரு பழைய குக்கர் அல்லது கேஸ் அவனில்  (கடைகளில் கிடைக்கிறது) மணல் போட்டு, அதன் மேல் டிரே வைத்து வேக  விட்டு எடுக்கலாம். பழைய இரும்புக் கடாயிலும் மணல் போட்டு மூடி  வைத்து பேக் செய்யலாம்.