Author Topic: டயட்டர் சந்தேஷ்  (Read 664 times)

Offline kanmani

டயட்டர் சந்தேஷ்
« on: April 20, 2013, 02:48:49 PM »
என்னென்ன தேவை?
பால் - 1 லிட்டர்,
தயிர் - 15 மி.லி.,
சுகர் ஃப்ரீ - தேவைக்கேற்ப,
பப்பாளி, அன்னாசி,
ஸ்ட்ராபெர்ரி என ஏதேனும்
பழத் துண்டுகள் - சிறிது,
பாதாம் - சிறிது.


எப்படிச் செய்வது?

பாலை நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் போது அதில் தயிர் சேர்த்தால், பால் திரியும். அதை மஸ்லின் துணியில் வடிகட்டி, தண்ணீர் மொத்தமும்  வெளியேற விட்டு எடுத்தால் பனீர் மாதிரி இருக்கும். அதில் சுகர் ஃப்ரீ சேர்த்து, மிக்சியில் ஒரே சுற்று சுற்றவும். ரொம்ப அரைக்கக்கூடாது. ஜெல்லி  மோல்டில் முதலில் இந்தக் கலவையைக் கொஞ்சம் விட்டு, அதன் மேல் பழத்துண்டு வைத்து, மறுபடி கலவை, அதன் மேல் பழத்துண்டு என 3  லேயர்கள் வைத்து, மேலே ஒரு பாதாம் வைத்து, ஃப்ரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும்.சட்டென செய்துவிடக் கூடிய ஸ்வீட். டயட்  செய்கிறவர்களும் இதை சாப்பிடலாம்.