Author Topic: பரங்கிக்காய் பால் கறி  (Read 614 times)

Offline kanmani

பரங்கிக்காய் பால் கறி
« on: April 20, 2013, 02:47:51 PM »
என்னென்ன தேவை?

பரங்கிக்காய் - 1 துண்டு,
பால் - அரை டம்ளர்,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 1,
பூண்டு - 10 பல்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

பரங்கிக்காயைத் தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக வெட்டி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நீளமாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, சீரகம்,  கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, அரை டம்ளர் தண்ணீர் விட்டு வேக விடவும். தண்ணீர் வற்றியதும், அதில் பால் விட்டுக் கலந்து அப்படியே சாப்பிடலாம்.சப்பாத்திக்கு பருப்பு சேர்த்த சைட் டிஷ் பிடிக்காதவர்கள், இதைச் சாப்பிடலாம். அவியல் ருசியில் இருக்கும். எண்ணெயே  சேர்க்காமல் செய்யப்படுவது. அளவே இன்றி, எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்