என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 கப்,
சர்க்கரை - ஒன்றேகால் கப்,
முந்திரி - 10 (சிறு துண்டுகள்),
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (சிறு துண்டுகளாக),
நெய் - 3 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு இடித்து அல்லது மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். இத்துடன் சர்க்கரை சேர்க்கவும். நெய்யை காயவைத்து, தேங்காய்த்துண்டுகள் போட்டு வாசனை வரும்வரை வதக்கவும். வாசனை வரும்போது முந்திரியையும் சேர்த்து வறுத்து ஆறவிட்டு, மாவுடன் சேர்த்து பிசைந்து வையுங்கள். இது நம்ம ஊர் மாவிளக்கு போல ஆந்திரத்தில் பிரபலமான இனிப்பாகும். பண்டிகை சமயங்களில் வீட்டுக்கு வீடு இருக்கும். குறிப்பாக தெலுங்கு வருடப்பிறப்பிற்கு அவசியம் செய்வார்கள்.