Author Topic: பாகற்காய் சம்பல்  (Read 666 times)

Offline kanmani

பாகற்காய் சம்பல்
« on: April 20, 2013, 02:36:55 PM »


    நடுத்தர அளவான பாகற்காய்கள் - 2
    நடுத்தர அளவான தக்காளி - 2
    பெரிய வெங்காயம் - பாதி
    பச்சை மிளகாய் - 1
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - அளவுக்கு
    பொரிக்க எண்ணெய்

 

    பாகற்காயைக் கழுவி, நீளமாக இரண்டாக வெட்டி, உட்பகுதியை கரண்டியால் சுரண்டி நீக்கவும்.
    மெல்லிதாக (அரைவட்டமாக) அரிந்து மஞ்சள் தூள், அளவுக்கு உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும்.
    எண்ணெயைக் காய விட்டு, காயை சிறிது சிறிதாகப் போட்டு (காய் நீர் விட்டு இருக்கும். அழுத்திப் பிழியாமல் வடித்து எடுத்துப் போடவும்.) பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பேப்பர் டவலில் பரவலாகப் போட்டு வடியவிடவும்.
    தக்காளி, பச்சை மிளகாயை வட்டமாக அரியவும்.
    வெங்காயத்தை மெல்லிதாக, நீளமாக அரிந்து உதிர்த்து வைக்கவும்.
    அனைத்தையும் தயாராக வைத்திருந்து பரிமாறுமுன் கலந்து பரிமாறவும். (ஏற்கனவே பொரிக்கும் சமயம் காய்க்கு உப்பு சேர்த்திருப்பதால் இப்போது குறைவாகச் சேர்த்தால் போதும்.) கலக்கும்போது அழுத்திப் பிசைய வேண்டாம். சம்பலில் பாகற்காய்த் துண்டுகள் இளகாமல் மொறுமொறுப்பாக இருக்க வேண்டும்.

Note:

கசக்காத, சுவையான சம்பல் இது.