Author Topic: வாழைத்தண்டு புளிக்கறி  (Read 684 times)

Offline kanmani


    வாழைத்தண்டு - 10 சென்டி மீட்டர் நீளமுள்ள துண்டு ஒன்று
    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
    உப்பு - தேவையான அளவு
    அரைக்க:
    தேங்காய் துருவல் - அரை கப்
    சின்ன வெங்காயம் - 3
    மிளகு - கால் தேக்கரண்டி
    மிளகாய் வற்றல் - 2 (காரத்திற்கு ஏற்ப)
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு இனுக்கு
    தாளிக்க:
    எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
    சின்ன வெங்காயம் - 2
    கடுகு - அரை தேக்கரண்டி
    வெந்தயம் - கால் தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு இனுக்கு

 

 
   

வாழைத்தண்டை மெல்லிய வில்லைகளாக வெட்டி மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
   

பிறகு வாழைத்தண்டை புளிக்கரைசல், உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
   

அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் கறிவேப்பிலை தவிர மற்றவற்றை மையாக அரைக்கவும்.
   

கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
   

வாழைத்தண்டு வெந்ததும், அரைத்த கலவையைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு அதிகம் கெட்டியாக இல்லாமல் சற்று நீர்க்க இருக்க வேண்டும். உப்பு, புளி சரிபார்த்துக் கொள்ளவும்.
   

எண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம் தாளித்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
   

குழம்பு நன்றாக கொதித்து, பச்சை வாசனை போனதும் தாளித்த கலவையை சேர்த்து இறக்கவும்.
   

சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையான வாழைத்தண்டு புளிக்கறி தயார். பழைய சாதத்தில் தயிரும், உப்பும் சேர்த்து பிசைந்து நடுவே இந்த புளிக்கறி ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.

 

முருங்கைக்காய், கத்திரிக்காய், வெள்ளரிக்காய், வெள்ளை பூசணிக்காயிலும் இதே போல் செய்யலாம். இந்த காய்களில் செய்யும் போது தேங்காய் அரைக்கும் போது மிளகு மட்டும் சேர்க்க தேவையில்லை. மற்றபடி இதே முறையில் செய்தால் சுவையாக இருக்கும்.