Author Topic: ஸ்பைஸி சிக்கன் கறி  (Read 840 times)

Offline kanmani

ஸ்பைஸி சிக்கன் கறி
« on: April 20, 2013, 02:30:40 PM »

    சிக்கன் - அரை கிலோ
    வெங்காயம் - பாதி
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
    மஞ்சள் தூள் - சிறிது
    கலவை தூள் - 2 தேக்கரண்டி
    கரம் மசாலா - கால் தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - ஒன்று
    கறிவேப்பிலை, உப்பு
    அரைக்க:
    தேங்காய் - சிறிது (அ) துருவல் - கால் கப்
    மிளகாய் வற்றல் - 2
    மிளகு - ஒரு தேக்கரண்டி
    சீரகம் - அரை தேக்கரண்டி
    இஞ்சி - ஒரு துண்டு
    பூண்டு - 2 பல்

 

 
   

அரைக்க வேண்டிய அனைத்தையும் நீர் விட்டு நைசாக அரைக்கவும்.
   

சிக்கனுடன் தூள் வகைகள் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும்.
   

பின் அரைத்த கலவை சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் ஊற விடவும்.
   

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
   

அதனுடன் சிக்கன் கலவை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும். மசாலா வாசம் போனதும் தேவையான நீர் விட்டு பிரட்டி விடவும்.
   

சிக்கன் நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும். சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.

 

இதை குக்கரிலும் செய்யலாம். வதக்கி விட்டு நீர் விட்டு மூடி வேக விடலாம். வெந்த பின் திறந்து வைத்து எண்ணெய் பிரிய விட்டு எடுக்கலாம். அரைக்கும் போது கொஞ்சம் கறிவேப்பிலை கூட சேர்க்கலாம். நீர் இல்லாமல் அப்படியே செமி க்ரேவியாகவும் எடுக்கலாம். தேங்காய் அளவை குறைத்துவிட்டு, சற்று கூடுதலாக எண்ணெய் விட்டு ட்ரை ஃப்ரையாகவும் எடுக்கலாம்.