வெள்ளை எள்ளு - 100 கிராம்
வெள்ளை உளுத்தம் பருப்பு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 8
கல் உப்பு - அரை தேக்கரண்டி
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் எள்ளை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெள்ளை உளுத்தம் பருப்பை போட்டு வறுத்து, அதனுடன் மிளகாய் வற்றல் சேர்த்து சிவந்ததும் எடுத்து விடவும்.
ஆறியதும் வெள்ளை உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும்.
பிறகு அதனுடன் வறுத்த எள்ளைச் சேர்த்து பொடி செய்து எடுக்கவும்.
இந்த பொடியை சாதத்தில் போட்டு நெய் சேர்த்து சாப்பிடலாம்.