சமூக வலைத்தளங்களில் மிகவும் முக்கியமானதாகவும், பெரும்பாலானோர்களின் செல்லக்குட்டியாகவும் திகழும் ஃபேஸ்புக் பல சிறப்பம்சங்களை தினமும் அறிமுகப்படுத்தியவாறே உள்ளது.
ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படும் இந்த ஃபேஸ்புக் சிலருக்கு நன்மைகளையும் பலருக்கு தீமைகளையுமே செய்துவருவதை உலகறியும். தீமைகளுக்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது ஹேக்கும், விஷமிகளுமே என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை ஹேக்கிலிருந்து பாதுகாக்கவும் இந்நிறுவனம் பல வழிகளிலும் முயன்று வருகிறது. யானைக்கும் அடிசறுக்கும் என்பதைப்போலவே இவ்வாறான நிகழ்வுகளும். நீங்களும் ஃபேஸ்புக் வழங்கும் பாதுகாப்பு உக்திகளை கடைபிடித்தால் உங்களுடைய கணக்கினையும் பத்திரம்போல் பாதுகாப்பாக்கலாம். சில நச் டிப்ஸ் உங்களுக்காக....
சூப்பர் நிறுவனங்களும் கலக்கல் வசதிகளும்...
கடவுச்சொல் :
ஃபேஸ்புக் பயன்படுத்துகையில் முக்கியமானதாக கருதப்படுவது கடவுச்சொல். பாஸ்வர்ட் என அழைக்கப்படும் இதை வலுவாக அமைக்கவேண்டும் என்பதே ஃபேஸ்புக்கின் முதன்மையான வேண்டுகோள். இந்த கடுவுச்சொல்லை வலுவானதாக்க குறைந்தது 6 எழுத்துக்கள் கொண்டதாகவாவது இருத்தல் சிறப்பு. அதில் !@#$%^ இம்மாதிரி குறியீடுகளையும் சேர்ப்பது பாதுகாப்பிற்கு முக்கிய வழிவகுக்கும்