செம்பருத்தி செடியில் இருக்கும் இலை கள் முதிர்ந்த இலைகளோ அல்லது கொழுந்து இலைகளையோ பறித்து (ஒரு ஆண் தலைக்கு சுமார் பத்து இலைகள் போதும்) மிக்சியில் போட்டு கொஞ்சம் தன்னிற் விட்டு அதிகபட்சம் கால் டம்ளர் அளவு தான் தண்ணிர் ஊற்ற வேண்டும். நன்கு அரைக்க வேண்டும். நன்கு இலைகள் மசிந்து கொழா கொழா என வந்ததும் எடுத்து தலையில் நன்கு தடவ வேண்டும் . சிதல உடம்பு காரர்களுக்கு கொஞ்சமாக தடவவும். மற்றவர்கள் தாரளமாக தடவவும்.
இந்த செபருத்தி இலைகள் சிதலமனது அதனால் சீதள உடம்பு காரர்கள் கொஞ்சமாக தடவி பரிசோதித்து விட்டு ஒத்துக் கொண்டாள் பிறகு தொடர்வது நல்லது.
தலையில் தடவிய பிறகு அந்த பசை காயும் வரை பொறுத்து , காய்ந்தவுடன் நன்றாக வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு வை பயன் படுத்தி குளிக்கவும். முன்று நாள் இது மாதிரி செய்து பாருங்கள். முடி கருப்பா, அடர்த்தியா இருக்கும். முடி கொட்டுவது குறைந்து இருக்கும். பொடுகு ம் குறைந்து இருக்கும்.