தேவையான பொருட்கள்:
காளான் - 6 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (சிறியது, நறுக்கியது)
சீஸ் - 10 கிராம் (துருவியது)
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மைதா மாவு - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் உப்பு போட்டு, நீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து, ஈரமான துணியால் சுற்றி தனியாக சிறிது நேரம் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் காளான் மற்றும் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கிக் கொள்ள வேண்டும். இறுதியில் துருவிய சீஸ் மற்றும் மிளகு தூள் சேர்த்து, 2 நிமிடம் கிளறி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு உருண்டையை எடுத்து, அதன் நடுவே பெருவிரலை வைத்து ஓட்டை போட்டு, செய்து வைத்துள்ள காளான் கலவையை சிறிது வைத்து, மீண்டும் உருண்டையாக்கி, பின் சப்பாத்தி போல் தேய்த்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தேய்த்து வைத்து பரோட்டாக்களை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி, வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான காளான் சீஸ் பரோட்டா ரெடி!!!