Author Topic: தர்பூசணி ஜூஸ்  (Read 841 times)

Offline kanmani

தர்பூசணி ஜூஸ்
« on: April 20, 2013, 09:03:16 AM »
கோடையில் தாகத்தை தணிப்பதற்கு தர்பூசணி ஒரு சிறந்த பழம். இத்தகைய பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை ஜூஸ் போன்று செய்து குடிக்கலாம். மேலும் அதிக பசியுடன் இருப்பவர்களோ அல்லது டயட்டில் இருப்பவர்களோ, தர்பூசணி ஜூஸை குடித்தால், பசி அடங்கிவிடும்.

மேலும் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கும், கர்ப்பிணிகளுக்கும் இந்த ஜூஸ் சிறந்தது. அதிலும் தர்பூசணி ஜூஸ் பலவாறு செய்யப்படுகிறது. இப்போது அவற்றில் ஒருமுறையான தர்பூசணி ஜூஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

தர்பூசணி துண்டுகள் - 3
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தர்பூசணித் துண்டுகளின் தோலை சீவி, விதைகளை நீக்கிவிட வேண்டும்.

பின் அதனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் தர்பூசணித் துண்டுகள், சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை பாத்திரத்தில் ஊற்றி, ஐஸ் கட்டிகளைப் போட்டு, சிறிது நேரம் கழித்து பரிமாறினால், சூப்பரான தர்பூசணி ஜூஸ் ரெடி!!!

குறிப்பு: இந்த ஜூஸில் எலுமிச்சை சாற்றிற்கு பதிலாக, 1 கப் காய்ச்சி குளிர வைத்த பாலை சேர்த்தால், சுவை இன்னும் அருமையாக இருக்கும்.