Author Topic: மிக்கி மௌஸ் கேக்  (Read 603 times)

Offline kanmani

மிக்கி மௌஸ் கேக்
« on: April 18, 2013, 01:11:12 AM »
 

    30 x 20 Cm செவ்வக கேக்
    ஃபாண்டன்ட் - 300 கிராம்
    ஃபுட் கலர்ஸ் - பச்சை, மஞ்சள், கருப்பு, சிவப்பு
    பட்டர் கிரீம் ஐசிங் -  குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது போல் இரண்டு மடங்கு

   

முதலில் கேக்கை அளந்து அந்த அளவிற்கு கடதாசி ஒன்றை வெட்டி எடுக்கவும். உள்ளே மிக்கி மௌஸ் படத்தை வரைந்து, எங்கே என்ன அமையப் போகிறது என்பதைத் தீர்மானித்து குறித்துக் கொள்ளவும்.
   

பட்டர் பேப்பரை இதன் மேல் வைத்து ட்ரேஸ் செய்து ஒவ்வொரு துண்டையும் தனித் தனியாக வெட்டி எடுக்கவும்.
   

வெட்டி வைத்துள்ள துண்டுகளை அளவாக வைத்து, வெண்நிற ஃபாண்டன்டில் கையுறைகள், கண்கள், பொத்தான்கள் ஆகிவற்றை இரண்டிரண்டாக அமைத்துக் கொள்ளவும்.
   

எப்பொழுதும் குச்சியால் நிறங்களைத் தொட்டு வைத்துப் பிசைந்தால் அளவு அதிகமாகாமல் சரியான சாயலை எடுக்கலாம்.
   

சிவப்பு நிறத்தில் காற்சட்டையை வடிவமைத்துக் கொள்ளவும். சிவப்பு நிறத்தில் மீந்ததில் ஒரு சிறு துண்டு எடுத்து மேலும் சிறிது வெண்நிற ஃபாண்டன்ட்டும், சில துளிகள் மஞ்சள் நிறமும் சேர்த்துப் பிசைந்து சப்பாத்துகள் (Shoes) வடிவமைக்கவும்.
   

கருப்பு நிறத்தில் மேற்சட்டையை வடிவமைக்கவும். கைகள், கால்கள், காதுகளையும் கருப்பு நிறத்தில் செய்து உலரவிடவும். அதிலேயே சிறிது எடுத்து கைகளின் நடுவில் வைத்து முட்டை வடிவில் உருட்ட மூக்கு கிடைக்கும்.
   

மீதமுள்ளதை உருட்டி ஒரு முனையை மட்டும் கூராக்கினால் வால் கிடைக்கும்.
   

மென்சிவப்பு வர்ணத்தில் முகத்தை வடிவமைக்கவும். முகத்தை இரண்டு துண்டுகளாகப் பிரித்து எடுத்து பிறகு இடையில் ஈரம் தொட்டு வைத்துவிட்டால் ஒட்டிக் கொள்ளும். மூக்கை ஐஸிங் தொட்டு முகத்தில் ஒட்டி கொள்ளவும்.
   

கேக்கை போர்டில் வைத்து ஐஸ் செய்துகொண்டு (ஆல்ஃபபெட் கேக் ஐஸ் செய்த விதத்தில்தான் இதுவும் ஐஸ் செய்யப்பட்டிருக்கிறது). துண்டுகளைக் கவனமாகப் பொருத்திவிடவும். கண்கள், பட்டன்களை ஐஸிங் தொட்டு ஒட்டிக் கொள்ளவும்.
   

குச்சியால் வாயை அடையாளம் செய்து கொண்டு, பின்பு 00 ப்ரஷ்ஷில் கருப்பு நிறம் தொட்டு வரைந்து கொள்ளவும். சிறிது பட்டர் ஐஸிங்கில் பச்சை மற்றும் ஏதாவது ஒரு விரும்பிய நிறம் (பூவுக்கு) கலந்து பூக்கள், இலைகளை பைப் செய்துவிடவும். Happy Birthday வாக்கியம் (சாக்லெட் அல்லது ப்ளாஸ்டிக் எழுத்துக்கள்) வைத்து அழுத்திவிடவும்.

 
 குறிப்பு: பட்டர் கிரீம் ஐஸிங்

கேக் அளவை மனதில் வைத்து சிலநாட்கள் முன்பாகவே மிக்கியின் பாகங்களைச் செய்து வைத்தால், தேவையானபோது கேக்கை ஐஸ் செய்து கொள்ளலாம். முன்பே செய்து வைப்பதாக இருந்தால் வால் மட்டும் ஒன்றுக்கு இரண்டாகச் செய்து வைத்தால் நல்லது. மெல்லிதாக இருப்பதால் இது உடைந்துவிடும் சந்தர்ப்பம் அதிகம்.