Author Topic: ஃப்ளவர் ஸ்வீட் பன்  (Read 527 times)

Offline kanmani

ஃப்ளவர் ஸ்வீட் பன்
« on: April 18, 2013, 01:09:07 AM »

    மைதா மாவு - ஒரு கிலோ + கால் கப் (டஸ்ட்டிங்கிற்கு)
    ஈஸ்ட் - 15 கிராம்
    முட்டை - 2 + 1
    இளஞ்சூடான பால் - 300 மில்லி
    சீனி - 100 கிராம்
    பட்டர் - 100 கிராம்
    உப்பு - ஒரு மேசைக்கரண்டி
    இளஞ்சூடான நீர் - 300 மில்லி

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
   

ஈஸ்ட்டுடன் சீனியைக் கலந்து கொள்ளவும். இளஞ்சூடான நீருடன் ஈஸ்ட் கலவையைக் கலந்து பொங்குவதற்காக 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். ஈஸ்ட் கலவை ரெடி.
   

2 முட்டைகளுடன், பாலைக் கலந்து அடித்து வைக்கவும்.
   

பொங்கிய ஈஸ்ட் கலவையை மைதா மாவுடன் சேர்த்து கலக்கவும்.
   

பின்னர் பட்டரும், உப்பும் சேர்த்து கலக்கவும்.
   

அடித்து வைத்துள்ள முட்டை, பால் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து மாவை மடித்து, மடித்து பிசையவும்.
   

இப்போது சாஃப்டான பந்து போல மாவுக் கலவை ரெடி.
   

மாவை ஈரத்துணியால் மூடி ஒரு மணி நேரம் சூடான இடத்தில் வைக்கவும்.
   

ஒரு மணி நேரத்திற்கு பின் மாவு இதேபோல் பொங்கியிருக்கும். அதனை அழுத்திவிட்டு மீண்டும் பொங்குவதற்காக 15 நிமிடங்கள் வைக்கவும்.
   

மாவை 20 பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளவும். மாவு தூவிய பலகையில் பிரித்த மாவில் சிறிதளவு எடுத்து ரோல் செய்யவும். படத்தில் காட்டியது போல இரண்டாகப் பிரித்துக் கொள்ளவும்.
   

அதன் ஒரு பகுதியை ஒரு முனையிலிருந்து உருட்டவும். அவ்வாறு மற்றொரு பகுதியையும் உருட்டிக் கொள்ளவும்.
   

இரண்டையும் ஒன்றாக சேர்த்து பின்னல் போல முறுக்கிக் கொள்ளவும்.
   

முறுக்கியதை இதேபோல் முடிச்சாக சேர்த்துக் கொள்ளவும். மீதமுள்ள மாவிலும் இதேபோல் செய்து 15 நிமிடங்கள் வைக்கவும்.
   

முட்டையின் வெள்ளைக்கருவுடன் 2 மேசைக்கரண்டி நீர் சேர்த்து அடித்து, செய்து வைத்துள்ள ஃப்ளவர் பன் மேல் பூசவும்.
   

ஃப்ளவரின் நடுவில் சிறிதளவு பட்டர் பூசி, சீனி தூவி, முற்சூடு செய்த அவனில் வைத்து 15-20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
   

ஃப்ளவர் ஸ்வீட் பன் ரெடி. நடுவில் ஜாம் வைத்து பரிமாறலாம்.