Author Topic: வெஜிடபுள் குருமா  (Read 569 times)

Offline kanmani

வெஜிடபுள் குருமா
« on: April 18, 2013, 01:05:58 AM »

    கேரட், காலிஃப்ளவர், பீன்ஸ், பட்டாணி - ஒன்றரை கப்
    நெய் / எண்ணெய் - 3 தேக்கரண்டி
    பெருஞ்சீரகம் - முக்கால் தேக்கரண்டி
    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 3
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - ஒன்று
    பச்சை மிளகாய் - 3
    புதினா - 10 இலைகள்
    தேங்காய் துருவல் - ஒரு கப்
    ஊற வைத்த முந்திரிப்பருப்பு - 10

   

முதலில் காய்கறிகளை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
   

பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம் சேர்த்து வெடித்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கி நன்கு வாசனை வந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
   

அதனுடன் தக்காளி, புதினா சேர்த்து வதக்கவும்.
   

பிறகு வேக வைத்த காய் கலவை சேர்த்து ஒரு கொதி விடவும்.
   

கொதித்ததும் தேங்காய் துருவலையும், முந்திரிப் பருப்பையும் மையாக அரைத்து ஊற்றவும்.
   

குழம்பு கொதித்து கெட்டியானதும் இறக்கி விடவும். சுவையான வெஜிடபிள் குருமா தயார். இது பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பத்திற்கு சுவையாக இருக்கும்.