தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
தயிர் - 1 கப்
பால் - 1 1/2 கப்
மாதுளை - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசி நன்கு கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியையும் போட்டு, தீயை குறைவில் வைத்து, சாதம் போன்று நன்கு வேக வைக்க வேண்டும்.
பின்பு அதனை இறக்கி லேசாக குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதில் தயிர், உப்பு, மாதுளை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி, 30 நிமிடம் கழித்து பரிமாற வேண்டும். இப்போது சுவையான மாதுளை தயிர் சாதம் ரெடி!!!