Author Topic: சாக்லெட் ஸ்மூத்தி  (Read 647 times)

Offline kanmani

சாக்லெட் ஸ்மூத்தி
« on: April 16, 2013, 07:10:56 PM »
குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவருக்குமே சாக்லெட் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லெட்டில் டார்க் சாக்லெட் சாப்பிட்டால், இதயத்திற்கு மிகவும் நல்லது. இத்தகைய சாக்லெட்டை அப்படியே சாப்பிடப் பிடிக்காதவர்கள், அதனை ஸ்மூத்தியாகவும் செய்து சாப்பிடலாம்.




தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி - 1 கப்
வென்னிலா ஃப்ளேவர் தயிர் - 1 கப்
சாக்லெட் சாஸ் - 3-4 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
அடித்த க்ரீம் - அலங்கரிக்க

செய்முறை: முதலில் மிக்ஸி/பிளெண்டரில் ஸ்ட்ராபெர்ரி, தயிர், சாக்லெட் சாஸ் ஆகியவற்றை போட்டு, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

 பின் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, அதன் மேல் அடித்து வைத்துள்ள க்ரீம் சேர்த்து அலங்கரித்து பரிமாறினால், சுவையான சாக்லெட் ஸ்மூத்தி ரெடி!!!